கணையம்
கணையம் (Pancreas) அல்லது சதையி அல்லது சதையம் என்பது மாந்தரின் உடலில் வயிற்றுப் பகுதியில் இரைப்பைக்குச் சற்று கீழே இருக்கும் ஓர் உறுப்பு ஆகும். தென்னிலங்கையில் இது பல்குத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இது காரட், முள்ளங்கி போல் உருவத்துடன், சுமார் 20-25 செ.மீ நீளம் உடைய ஓர் உறுப்பு. இந்த உறுப்பானது உணவைச் செரிப்பதற்குப் பயன்படும் நொதியங்களைக் கொண்ட கணையநீரைச் சுரக்கின்றது. அத்துடன் கணையத்தில் உடலுக்கு மிகத் தேவையான சில உயிரியல் இயக்குநீர்கள் சுரக்கின்றன. இன்சுலின், குளூக்கொகான் (glucogon), சுரப்பி அமைப்புகளில் மட்டுப்படுத்தும் பணி செய்யும் தணிப்பியாகிய சோமட்டாசிட்டாடின் போன்ற இயக்குநீர்கள் சுரக்கின்றன. இதனால் கணையமானது நொதியங்களைக் கொண்ட குழாய்வழி சுரப்பிநீரைச் செலுத்தும் சமிபாட்டுத்தொகுதியின் ஓர் அங்கமாகவும், இயக்குநீர்களைச் சுரக்கும் நாளமில்லாச் சுரப்பிகளைக் கொண்டிருப்பதனால், அகச்சுரப்பித் தொகுதியின் ஓர் அங்கமாகவும் இயங்குகின்றது. இந்த நொதியங்கள் கார்போஹைட்ரேட்டு, புரதம், கொழுப்பியம் (lipid), குறைசெரிப்புநீர்மம் போன்றவற்றை பிரிக்க (சிதைவாக்க) உதவுகின்றன.
- கூலும்
- கூலும் (coulomb) அல்லது கூலோம் என்பது மின்மத்தை அளக்கும் அனைத்துலக அலகு. இந்த அலகின் அனைத்துலகக்
- வோல்ட்டு
- வோல்ட்டு என்பது மின்னழுத்தத்தை அளக்கப் பயன்படும் ஒரு மின் அலகு. இதன் குறியீடு (V). ஓர் (Ω) ஓம் (மின்னியல்
- நைட்ரிக் காடி
- நைட்ரிக் காடி (HNO3), மிகவும் அரிப்புத்தன்மை கொண்ட, கடுமையான காடிப்புண் உண்டாக்ககூடிய கடுங்காடி
- அமோனியா
- நவச்சாரியம், நவச்சாரகம் அல்லது அமோனியா (Ammonia) என்பது ஒரு நைதரசன் அணுவுடன் மூன்று ஐதரசன் அணுக்கள்
- குருத்தெலும்பு
- குருத்தெலும்பு அல்லது கசியிழையம் (cartilage) என்பது மனிதர், வேறு விலங்குகளின் உடலின் பல
- அவுமியா
- அவுமியா ஞாயிற்றுத்தொகுதியில் நெப்டியூனுக்கு அப்பால் காணப்படும் ஓர் குறுங்கோள் ஆகும். இது
- மின்புலம்
- மின் தன்மைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஓர் அணுவுக்குள்ளும் இருவேறு தன்மை உடைய நுண் துகள்கள்
- ஒளித்தொகுப்பு
- ஒளிச்சேர்க்கை அல்லது ஒளித்தொகுப்பு (Photosynthesis) என்பது தாவரங்கள், பாசிகள் மற்றும் சிலவகை பாக்டீரியாக்கள்
- காடித்தன்மை எண்
-
காடிப்பிரிகை எண் Ka (இது காடித் தன்மை எண் என்றும் காடி-மின்மியாக்கு எண் என்றும் அறியப்படுகிறது
- தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
- தஞ்சாவூர் பொம்மைகளில் தலை அசைகிறவாறு உள்ள பொம்மைகள் தலையாட்டி பொம்மைகள் எனப்படுகின்றன